ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Right Click செய்ய வரும் Context Menu இல் எந்த ஒரு மென்பொருளையும் இணைப்பது எவ்வாறு? ..

அதாவது Registry Editor ஐ பயன்படுத்தி நீங்கள் விரும்பும் எந்த ஒரு மென்பொருளையும் Right Click செய்ய வரும் Context Menu இல் இணைக்கலாம்.
இதன் மூலம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தக்கூடிய மென்பொருள்களை Right Click செய்வதன் மூலம் மிக இலகுவாக திறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனை நீங்களும் மேற்கொள்ள விரும்பினால் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

இங்கு உதாரணத்திற்கு Right Click செய்ய வரும் Context Menu இல் எவ்வாறு Notepad இனை இணைப்பது? என பாப்போம்.

1. முதலில் Run Program ஐ திறந்து regedit என தட்டச்சு செய்கது Enter அலுத்துக.

2. பின் திறக்கப்படும் Registry Editor இல் பின்வரும் இடம் வரை திறந்து கொள்ளுங்கள்.

HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell


3. பிறகு shell (1) என்பதன் மேல் Right Click செய்து New (2) ===> Key (3) என்பதனை சுட்டி உருவாகாப்படும் புதிய Key File இற்கு Notepad என பெயரிடுங்கள். இனி உருவாக்கப்பட்ட Notepad எனும் Key File இற்கு command Key ஒன்றினை உருவாக்க வேண்டும்.



4. இதற்கு நீங்கள் உருவாக்கிய Notepad என்ற Key மேல் Right Click செய்து New (4) ===> Key (5) என்பதனை சுட்டுவதன் மூலம் உருவாக்கப்படும் புதிய Key File இற்கு command என பெயரிடுக. (இது ஆங்கில சிறிய எழுத்துக்களில் அமைய வேண்டும். Lowercase) இனி நீங்கள் இணைக்க விரும்பும் மென்பொருளின் Path முகவரியை பெற வேண்டும்.



6. இங்கு நாம் எடுத்துக்கொண்ட மென்பொருள் Notepad ஆகையினால் அது "C:\Windows\System32" கோப்பில் அமைந்திருக்கும். எனவே இதன் Path முகவரியை Copy செய்து கொள்ள குறிப்பிட்ட கோப்புக்கு சென்று Notepad (6)இன் மேல் Shift Button ஐ அழுத்தியவாறு Right Click செய்ய வேண்டும். பின் தோன்றும் Copy as Path (7)என்பதனை சுட்டுவதன் மூலம் அதன் Path முகவரியை Copy செய்து கொள்ளலாம்.



7. இனி நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய command Key (8) ஐ சுட்டுக. பின் Registry Editor இன் வலதுபுறம்  (Default) என்ற ஒரு key File (9)இனை அவதானிக்கலாம்.

8. பிறகு அதனை Double Click செய்ய வரும் சாளரத்தில் Value Data என்பதில் நீங்கள் Copy செய்த Path முகவரியை Past (10) செய்து Ok அழுத்துக.


அவ்வளவுதான்.

இனி உங்கள் Desktop இல் Right Click செய்து பாருங்கள் நீங்கள் இணைத்த அந்த மென்பொருள் Context Menu இல் இணைந்திருக்கும்.

இந்த முறையில் ஒன்றுக்கு மேற்பட்ட எத்தனை மென்பொருள்களையும் இணைத்துக்கொள்ளலாம்.

இங்கு Notepad ஆனது Windows கணனியில் தரப்படும் ஒரு மென்பொருள் ஆகையினால் அது C:\Windows\System32 என்ற கோப்பில் இருந்தது. இருந்தாலும் நாம் கணனியில் நிறுவும் மென்பொருள்கள் "C:\Program Files\ என்ற கோப்பிலேயே சேமிக்கப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.