ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கணினித் தொகுதி

கணினியென்பது தனியொரு உபகரணமல்ல.மாறாக பல பாகங்களையும் துணை கருவிகளையும் இணைத்து இயங்கும் ஒரு தொகுதியாகும். சில கணினிகள்
பார்வைக்கு தனியொரு கருவியாகத் தென்பட்டாலும் பல்வேறு வேலைகளைச் செய்வதற்கு அதனுள்ளேயும் வெளியேயும் பல பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பான தேவைகளின் பொருட்டு இணைக்கப்பட்டு மிகவும் வியக்கத்தக்கவகையில் கணினியின் செயற்பாடுகளுடன் பின்னிப்பிணைந்துள்ளன. அடிப்படையில் கணினி ஒன்றின் செயற்பாடுகளை ஒருங்கமைக்கும் உறுப்புக்களை நாம்விளங்கிக்கொள்வதற்கு அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


1. வன்பொருள்

கணணியுடன் இணைக்கப்பட்டுள்ள எமது கண்ணால் காணக்கூடிய, தொட்டுணரக்கூடிய கருவிகள் கணணி வன்பொருட்களாகும். இவற்றை தேவைகளுக்கேற்ப கணணியில் பொருத்த, அகற்ற, அல்லது பழுதுபார்க்க முடியும்.
கணினி வன்பொருட்களை பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.

1. மத்திய செயலி Central Processing Unit (CPU)

இது கணினியின் பிரதான செயற்பாட்டுப் பகுதியாகும். கணினி செயற்படும்போது அதன் இயக்கத்தை நிர்வகிப்பதும் கட்டுப்படுத்துவதும் இதன் பிரதான செயற்பாடாகும். கணினியின் மூளை என்று இதனைக் கூறலாம்.

2. சேமிப்பகம் Storage

தரவுகளைக் கணினியின் சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சேமிப்பகங்களாகும். இது பிரதானமாக இரு பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது.

I. முதன்மைச் சேமிப்பகம் Primary Storage

கணணி இயங்கிக்கொண்டிருக்கும்போது அதன் இயக்கத்திற்குத்தேவையான தரவுகள், மென்பொருள் வழிமுறைகள் போன்றவை முதன்மைச்சேமிப்பகத்தில் சேமிக்கப்படும். கணணியின் அகத்தே பொருத்தப்பட்டுள்ள இச்சேமிப்பகங்களில் RAM, ROM என இருவகை உள்ளன.
I. RAM(Random Access Memory தற்போக்கு அணுக சேமிப்பகம் )
தற்போக்கு அணுக சேமிப்பகம் என்பது கணணியின் இயக்கத்தின்போது உடனுக்குடன் தேவைப்படும் தரவுகளை தற்காலிகமாக சேமித்து வைக்கிறது. நாம் கணணிக்குள் உள்ளிடும் தரவுகள் முதலில் இப்குதியிலே செலுத்தப்படும். இச்சேமிப்பகத்திலுள்ள தரவுகள் கணணியின் இயக்கத்தை நிறுத்தியவுடன் அழிந்துவிடும்.
II. ROM (Read Only Memory வாசிக்க மாத்திரமான சேமிப்பகம்)
ROM (Read Only Memory வாசிக்க மாத்திரமான சேமிப்பகம்) இதிலுள்ள தரவுகளை கணினியானது வாசிப்பதற்கு மாத்திர பயன்படுத்தும். கணினியின் இயக்கத்துக்குத் தேவையான பிரதான அறிவுருத்தல்கள் இவற்றில் சேமிக்கப்பட்டிருக்கும். கணினியை இயக்கியவுடன் அத்தரவுகளை வாசித்து அதன்படி இயங்கும். ஆனால் இவற்றில் தரவுளைப் பதிவு செய்ய முடியாது. கணினியின் அகத்தேயுள்ள சிப் (Chip) களில் அவை தயாரிக்கப்படும்போதே தேவையான தரவுகள் அவற்றில் பதியப்படும்.

II. துணைச் சேமிப்பகம் (Secondary Storage)

தரவுகளை நிரந்தரமாக சேமித்து வைக்க கணினியில் இவை பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் இயக்கம் நிறுத்தப்பட்டாலும் இவற்றிலுள்ள தரவுகள் அழிவதில்லை. உதாரணமாக மென்தட்டு (Floppy Disk), நிலை வட்டு (Hard Disk), குறுவட்டு CD ROM), Pen Drive போன்றவற்றைக் குறிப்பிடலாம்.




3. உள்ளிடு கருவிகள் (Input Devices)

உள்ளிடு கருவிகள் (Input Devices) நாம் கணணிக்கு தரவுகளை உட்செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிடு கருவிகள் எனப்படும். உதாரணமாக Keybord, Mouse, Touch Screen, Joystic, Barcode reader, Smart cards, CD Rom, Digitat Camera, Microphone போன்றவற்றைக்குறிப்பிடலாம்.


4. வெளியிடு கருவிகள் (Output Devices)

கணினியிலிருந்து தகவல்கள் வெளியிடப்படும் கருவிகள் வெளியிடு கருவிகளாகும். இவை மனிதன் பார்க்கக்கூடிய, கேட்கக்கூடிய முறைகளில் வெளியிடப்படும். உதாரணமாக கணினித்திரை(Monitor), Speaker, Printer போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

5. COMMUNICATION DEVICES (தொடர்பாடற் கருவிகள்)

ஓன்றுக்கு மேற்பட்ட கணணிகளை தொடர்புபடுத்தி தரவு தகவல்களை பரிமாறிக்கொள்ள பயன்படும் கருவிகளாகும்.
Eg: Network Card, Modem

2. மென்பொருள் (Software)

கணினித்தொகுதியின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்காக அதற்கு வழங்கப்படும் அறிவுருத்தற் தொகுதியானது மென்பொருள் எனப்படும்.
மென்பொருளின் பிரதான செயற்பாடுகள்,
• கணினியின் பாகங்களைக் கட்டுப்படுத்தல்.
• கணினியை இயக்குபவருக்கு அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
• சேமிப்பகங்களிலுள்ள தரவுகளையும் கணினித்தொகுதியையும் இணைக்கும் ஊடகமாகச் செயற்படல்.

மென்பொருட்கள் கணினியின் சேமிப்பகங்களில் பதியபப்ட்டிருக்கும். இவை கணினியின் தேவைக்கேற்ப முதன்மை சேமிப்பகத்திற்கு ஏற்றப்பட்டு அதிலிருந்து அறிவுருத்தல்களைப் பெற்று இயங்கும்.

மென்பொருளானது இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

I. மென் தொகுதி (System Software)

மென் தொகுதி (System Software) கணணியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் தொகுதி இதுவாகும்.
[1. Operating system , 2. Utility Software]

உதாரணம் : Windows, Linux, Unix ...

II. மென் ஒருங்கு (Application Software)

மென் ஒருங்கு or பயன்பாட்டு மென்பொருள் (Application Software) கணணியில் நமக்கு வெவ்வேறு வேலைகளைச் செய்துகொள்ள களம் அமைத்துத்தரும் மென்பொருட்கள் இப்பிரிவில் அடங்கும்.

உதாரணமாக : Microsoft Word, Excel, Adobe Photoshop, CorelDraw....

3. உயிர்ப்பொருள் (Liveware)

கணணியை இயக்குபவர் உயழர்ப்பொருள் பிரிவில் அடங்குவார்.

4. நிலை பொருள் (Firmware)

கணணியுடன் இணைக்கப்படும் கருவிகளில் உள்ள விசேட சேமிப்பகங்களில் பதியப்பட்டிருக்கும் மென்பொருட்கள் நிலைபொருள் எனப்படும். ஒவ்வொரு கருவிகளின் செயற்பாடுகள் பற்றியும் அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களையும் இதன் மூலம் கணணி பெற்றுக்கொள்ளும். (eg:BIOS)