ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கணினியும் தரவுகளும்

கணினி ஒன்று தரவுகளை அளவிடும் விதமும் அதனை பயன்படுத்தும் விதமும் மிகவும் நுணுக்கமான செயற்றிறன் கொண்டவை. அந்த வகையில் கணினி ஒன்று தனது அளவுகளை Bபயிட்(byte) என்ற அளவீட்டினால்; குறித்துக்கொள்கின்றது.

உண்மையில் தரவுகளனின் மிகவும் குறைந்த பெறுமானம் Bபிட்(bit) என கொள்ளப்படும். அதாவது கணினியின் தரவுகளை புரிந்துகொள்ளும் முறைமையில் ஒரு Bபிட் என்பது 0 அல்லது 1 என்ற ஏதாவது ஒரு இலக்கத்தினை குறிப்பதாகவே இருக்கும்.
ஆனால் எட்டு Bபிட்ஸ் இணைந்து ஒரு Bபயிட் உருவாக்குகின்றது.
பின்னர் 1024 Bபயிட்ஸ் என்பது 1 கிலோ Bபயிட்ஸ்(KB) என்பதாக மாறுகின்றது
அதன் பின்னர் 1024 கிலோ Bபயிட்ஸ் என்பது ஒரு மெகா Bபயிட்ஸ்(MB) எனவும்
1024 மெகா Bபயிட்ஸ் என்பது 1 ஜிகா Bபயிட்ஸ்(GB) எனவும்
1024 ஜிகா Bபயிட்ஸ் ஒரு ரெறா Bபயிட்ஸ்(TB) பின்னர்
பெட்ரா Bபயிட்ஸ்(PB), எக்~h Bபயிட்ஸ்(HB), n~ட்ரா Bபயிட்ஸ், யொட்ரா Bபயிட்ஸ் எனவும் கணிப்பிடப்படும்.

உதாரணமாக இந்த அளவீட்டின்படி 1 ஜிகா Bபயிட்ஸ் என்பது
1024 மெகா Bபயிட்ஸ் எனவோ
அல்லது 1,073,741,824 Bபயிட்ஸ் எனவோ
பின்வருமாறு கணிப்பிடப்படலாம். (1024x1024x1024=1,073,741,824)
ஒரு Bபயிட் என்பது ஒரு தரவினை கணினியில் கண்டுகொள்வதற்கான போதுமான அளவினை கொண்டுள்ளது. இதுவே கணினி ஒன்றில் தரவுகள் மற்றும் தரவு சேமிப்பு மூலங்களின் செயற்பாடுகளுடன் கணினி தனது அளவீடுகளை கணித்துக்கொள்ளும் அடிப்படை பெறுமானமாகும்.

உதாரணமாக ஒரு கணினியின் தட்டச்சு பிரதி மிகவும் எளிமையான தோற்றத்தில் சில Bபயிட்ஸ் அளவுகளில் காட்டப்படுகின்றது. அதே வேளை ஒரு கணினியின் தற்காலிக சேமிப்பகங்கள் மெகா Bபயிட்ஸ்(தற்போது ஜிகா Bபயிட்ஸ்) அளவுகளிலும் காட்டப்படுகின்றன. அதே போல் ஒரு கணினியின் நிரந்தர சேமிப்பகங்கள் ஜிகா Bபயிட்ஸ் அளவுகளில் காட்டப்படுகின்றன.

இப்போது ஒரு விடையத்தை பார்ப்போம்

Bபயிட்ஸ் என்பது என்ன?

நீங்கள் கணினியில் பதிவு செய்யும் ஒவ்வொரு எழுத்துக்களும், குறியீடுகளும், புள்ளிகளும், இடைவெளிகளும் ஒவ்வவொரு Bபயிட்ஸ் என்பதை நீங்கள் காணலாம்.
உதாரணமாக கீளே உள்ள இந்த வாக்கியம் 40 Bபயிட்ஸ் என நாம் குறிப்பிடலாம் .
"HJ 3 4NK N22 JH2J2 345 E';EEEIN23 3N4R" = 40 bytes
1234567890123456789012345678901234567890 = 40 bytes
நீங்கள் இதனை நோட்பாட் மென்பொருளை பயன்படுத்தி சோதனை செய்து பார்க்கலாம். ஆனால் இதே வாக்கியத்தினை நீங்கள் வேறு மென்பொருட்களை பயன்படுத்தி சேமிக்கும்போது அது அதிகளவான Bபயிட்ஸ் னை காட்டலாம். காரணம் ஒரு நோட்பாட் மென்பொருளினை நீங்கள் பயன்படுத்தி இவ்வாக்கியத்தினை சேகரிக்கும்போது அது மிகவும் எளிமையான அடிப்படைத்தரத்தில் வாக்கியத்தை சேமிக்கின்றது.
ஒரே வாக்கியத்தினை ஒவ்வொரு மென்பொருளும் ஒழுங்குபடுத்திக்கொள்ளும் வடிவம் வேறுபட்டது. சில மென்பொருட்கள் வாக்கியத்தினை உயர் தரங்களில் தமது பாவனைக்கு ஏற்றாற்போல் சேமிக்க முற்படும்போது அவற்றிற்கு அதிக சேமிப்பு இடம் தேவைப்படுகின்றது. இவ்வாறு ஒரு மென்பொருள் ஒரு விடையத்தினை (அது எழுத்தாகவோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ இருக்கலாம்) அதற்கே உரிய சிறப்பான வடிவத்தினை தேர்ந்தெடுத்தோ, தனக்கே உரித்தான தரத்திலோ அல்லது நீங்கள் தெரிவு செய்யும் வடிவத்திலேயோ சேமிக்கும். இவ்வாறு வேறுபட்ட வடிவங்களில் உருவாக்கப்படும் தரவுகளின் கட்டமைப்பு Fபைல் Fபோர்மட்(fileformat) எனப்படுகின்றன.

ஒரு மென்பொருள் கொடுக்கப்பட்ட எழுத்துக்களுக்கு தேவையான கொள்ளளவினை காட்டிலும் அதிகமாக கொள்ளவினை கொண்டு அதனை சேமிக்கின்றது எனின் அது அவ் எழுத்துக்களுடன்(உதாரணமாக எழுத்துக்களுக்கு நிறம் ஊட்டல், அட்டவணை என) மேலதிக வசதிகளையும் உங்களுக்கு ஏற்படுத்தித் தந்துள்ளது என காணலாம். ஒரு மென்பொருள் தனக்கே உரிய தரத்தில் சேமிக்கும் தரவினை மற்றுமொரு மென்பொருளால் பெரும்பாலான வேளைகளில் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே அதே மென்பொருளையே மீண்டும் பயன்படுத்தவேண்டிய தேவை எற்படுகின்றது. அது ஒரு கணினியில் தரவுகள் எவ்வாறு கையாளப்படகின்றன என்பதற்கான அடிப்படை விளக்கமாகும். எனினும் இதனுடன் இணைந்ததாக மற்றுமோர் விடையம் உண்டு. அதாவது ஒரு தரவிணை கணினி எவ்வாறு புரிந்து கொள்கின்றது. வெவ்வேறுபட்ட மூன்று இலக்க முறைமைகளை இதற்காக பயன்படுத்துகின்றது. அவையாவன decimal, binary மற்றும் hexadecimal என்பனவாகும்.

COMPUTER (கணணி )

உள்வாங்குதல் (receiving), சேமித்தல் (storing), மாற்றியமைத்தல் (manupulating) போன்ற திறமைகளைக்கொண்ட ஒரு இலத்திரனியல் சாதனம் கணனி என அழைக்கப்படுகின்றது.

Processing

கொடுக்கப்படும் தரவுகளை (data) மாற்றியமைத்தலே Processing என அழைக்கப்படுகின்றது. இதன்போது சுருக்குதல், சேமித்தல், வழங்கப்படும் தரவுகளை மீளப்பெறல் போன்றவற்றுடன் கூட்டல், கழித்தல், பிரித்தல், பெருக்கல் போன்ற கணித்தல் வேலைகளும் நடைபெறுகின்றன.

Data (தரவு)

கணனியில் சேமிக்கக்கூடிய மாற்றியமைக்கக்கூடிய எண்கள் எழத்துக்கள் உருவங்கள் என்பவற்றைக்குறிக்கும்.

Information (தகவல்கள்;)

மாற்றியமைக்கப்பட்ட date களின் விளைவு or வெளிப்பாடு Information ஆகும்.

programs (நிகழ்ச்சித்திட்டங்கள்)

தரவுகள் கணனியினுள் சென்றதும் அவற்றைச் செயற்படுத்துவதற்கு கணனி தயாராக இருக்கும். ஆனால், அவற்றை எவ்வாறு, எப்படி, என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் கணனிக்கு முன்னரே சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். இவை அறிவுறுத்தல்கள்; (instructions) அல்லது கணனி நிகழ்ச்சித்திட்டங்கள்; (programs) என அழைக்கப்படுகின்றன.
* கணனியானது குறிப்பிட்ட வேலையினைச் செய்வதற்கு நிகழ்ச்சித்திட்டங்கள் வழிகாட்டுகின்றன. கணனி நிகழ்ச்சித்திட்டத்தின் அறிவுறுத் தல்கள் முழுமையாகவும் தெளிவானமுறையிலும் கொடுக்கப்படல் வேண்டும். இவை கணனிமொழியில்; (Computer Language) கொடுக்கப்படல்வேண்டும்.

கணனி மொழிகள் சில : Basic, Pascal, C++, JAVA, C#

தரவுகள் உரியமுறையில் செயற்படுத்தப்பட்டதும் விளைவுகள் கணனியைப் பயன்படுத்துவோருக்கு வெளியீட்டுச் சாதனம் (Output Device) மூலம் வழங்கப்படுகின்றது.