ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கணனியின் நன்மைகளும் தீமைகளும்

நன்மைகள் (Advantages)

1. மிக விரைவானது
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ் (Hertz – Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணனிக்குக் கணனி மாறுபடுகின்றது.


2. மிகவும் திருத்தமானது.
இலத்திரனியல் சுற்றுக்கள் பொறியியல் பகுதிகளைப்போன்று இலகு வில் பழுதடைவதில்லை. அத்தோடு இவை மிகவும் திருத்தமானவையாகவும் நம்பகமானவையாகவும் இருக்கின்றன.

3 . நினைவகம் (Memory)
இதில் அதிகளவிலான தரவுகளைச் சேமித்துவைப்பதுடன் உரிய நேரத்தில் அவற்றை மிகவிரைவாகவும் எடுக்கக்கூடியதாகவுள்ளது.

தீமைகள் (Disadvantages)

1. அறிவுறுத்தல்கள் இல்லாமல் கணனி எதனையும் செய்யாது. மனிதனின் முக்கியமான திறன்களான சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல், காரணங்களைக் கண்டறிதல், சுயமாக உருவாக்கல்; போன்றவற்றைக் கணனி கொண்டிருக்கமாட்டாது.

2. கணனியானது நிகழ்ச்சித்திட்டத்தின்படியே செயற்படுகின்றது. எனவே நிகழ்ச்சித் திட்டங்கள் பிழையாக இருப்பின் எப்போதும் பிழையான பெறுபேறுகளையே கணனி தரும்.

3. தவறான தரவுகளைக் கொடுத்தால் தவறான பெறுபேறுகளே கிடைக்கும்.

கணனியைப் பாராமரித்தலும், பாதுகாத்தலும்
(COMPUTER MAINTENANCE AND PROTECTION)

கணனியைப் பராமரித்தல் (Computer Maintenance)

* கணனியினை shut down செய்யும்போது உங்களிற்கு “It is now safe to turn off your Computer” என்ற செய்திதோன்றிய பின்னரே கணனியினை off செய்யவேண்டும். (தற்கால கணனிகள் தானகவே off நிலைக்கு வரும்;)

* Off செய்யமுன் அனைத்துப் புரோகிராம்களிலும் இருந்து வெளியேறிய பின்னரே நீங்கள் off செய்தல்வேண்டும்.

* உங்கள் கணனியை வேறுயாரும் பயன்படுத்தாமல் நீங்கள்மட்டும் பயன்படுத்த விரும்பும்போது அதற்காக நீங்கள் Password இனைக் கொடுத்துவையுங்கள்.

* ஒவ்வொரு முறையும் புதிய Program கள் பதியும்போதும், File படிக்கும்போதும் Copy செய்யும்போதும் வைரஸ் உள்ளதா என சோதிக்கவும்.

* 3 மாதத்திற்கு ஒரு முறையாவது Defrag செய்வது நல்லது. சிதறிக்கிடக்கும் உங்கள்; File களை ஒன்றிணைப்பதன் மூலம்; Disk இன் ஏராளமான இடத்தை மிச்சம் செய்துகொள்ளலாம்.

* அதேபோன்று 6 மாதங்களுக்கு ஒருமுறையாவது Scandisk ஐ இயக்குவதன் மூலம்; Hard disk இன்; Crash Linked File களை சரிப்படுத்தலாம், மேலும் Hard disk இல் ஏதேனும் பழுதுகள் ஏற்பட்டுள்ளதா என அறியலாம்..

* Floppy Drive இற்குள் எளிதில் தூசி நுளைந்துவிடும். எனவே எப்பொழுதும் Floppy Drive Hard Cleaner வைத்திருங்கள்.

* CD ROM Drive Head Cleaner CD ஒன்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் சில பழைய Disk களைப் படிக்கமுடியும்.

கணனியைப் பாதுகாத்தல்; (Computer Protection)

* கணனியில் பழுது ஏற்பட முக்கிய காரணம் பெரும்பாலும் சரியில்லாத மின்சாரமே ஆகும். எனவே அதனை சரி செய்துகொள்ளவேண்டும்.

* UPS வைத்திருக்கவேண்டும். இல்லையெனில் வேலை செய்துகொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டால் வேலை செய்துகொண்டிருந்த Program அழிந்துபோய்விடும். மேலும்; Hard Disk> ROM பழுதடைந்துவிடும்.

* கணனியினை off செய்யும்போது UPS இனையும்; off செய்வதன் மூலம் அதன் மின்கலத்திற்கு அதிக வாழ்நாளைக் கொடுக்கலாம்.

* கணனியின் மெயின் பிளக் இனை எடுத்துவிடுங்கள். மழை நேரங்களில் மின்னல் மூலம் கணனி பழுதடைய வாய்ப்புள்ளது.

* Keyboard இல் தூசுகள், பின்கள், குண்டூசிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவை Keyboard இனை பழுதடையச் செய்துவிடும்.

* உங்கள் கணனியினை அடிக்கடி இடமாற்றம் செய்யாதீர்கள். வெளியூருக்கு கணனியினை எடுத்துச் செல்லும்போது சரியாகப் பொதிசெய்யவும். இல்லை யெனில் உடையும் வாய்ப்புள்ளது.

* கணனி ON இல் இருக்கும்போது Keyboard, Printer, Mouse ஆகியவற்றினை இணைக் கவோ கழற்றவோ செய்யாதீர்கள்.

* Mouse சரிவர இயங்க அதன்; Rubber Bar இல் அழுக்குகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதனை Alcohol கொண்டு துடையுங்கள்.

* கணனி இயங்கிக்கொண்டிருக்கும்போதோ அல்லது நிறுத்திய உடனோ மூடுதல் கூடாது. இயங்கும்போது கணனியில் உள்ள துவாரங்கள் மூடப்பட்டிருத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.