ramanicom உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

கல்லீரல் நோய்களை குணப்படுத்தும் கீழாநெல்லி!!


காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வந்தால் கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடையும்.

துளசிச்சாற்றை தினமும் குடித்து வந்தால் கல்லீரல், மண்ணீரல் நோய்களை தடுக்கலாம்.


நெல்லிக்காய் வற்றல் 50 கிராம், சீரகம் 50 கிராம், இந்த இரண்டையும் பொடி செய்து ஒரு வாரத்துக்கு காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பருப்பு கீரை, கீழா நெல்லி இரண்டையும் சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் வற்றும்.

பூவரசு மரத்தின் கொழுந்து இலைகளுடன் 6 மிளகு சேர்த்து அரைத்து, அதை மோரில் சுண்டைக்காய் அளவு கலந்து மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்பு போட்டு கடைந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் குணமாகும்.