Microsoft Word 2007 or 2010 இல் குறித்த page ற்கு தனியான page border ஐ வழங்குவதற்கு
தனியான page border வழங்கவேண்டிய page ஐ தீர்மானித்து குறித்த page இன் ஆரம்பத்தில் cursor(சுட்டி) ஐ click செய்து section breaks continuous வழங்கவும்.
கணனியின் நன்மைகளும் தீமைகளும்
நன்மைகள் (Advantages)
1. மிக விரைவானது
பல மில்லியன் கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது. இதனது இவ்வேகம் கேட்ஸ் (Hertz – Hz) எனும் அலகில் அளக்கப்படுகிறது. அத்தோடு இவ்வேகம் கணனிக்குக் கணனி மாறுபடுகின்றது.

கணினியும் தரவுகளும்
கணினி ஒன்று தரவுகளை அளவிடும் விதமும் அதனை பயன்படுத்தும் விதமும் மிகவும் நுணுக்கமான செயற்றிறன் கொண்டவை. அந்த வகையில் கணினி ஒன்று தனது அளவுகளை Bபயிட்(byte) என்ற அளவீட்டினால்; குறித்துக்கொள்கின்றது.
கணினித் தொகுதி
intel i3,i5,i7 processor களுக்கு இடையேயான வேறுபாடுகள்.
இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை சென்ற ஆண்டோடு நிறுத்திக்கொண்டது. இனி i3,i5 மற்றும் i7 ப்ராசசர்களின் காலம் தான்.
கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?
எமது கணனியில் உள்ள Driveகளில் உள்ள fileகளை மற்றவர்கள் பார்க்காதவாறு அந்த Driveவையே மறைத்து வைத்துக் கொள்ளலாம்.
இணைப்பு வாயில்களும் இணைப்புக்களும்.
கணினி ஒன்றினை பொறுத்தவரை அது பல வன்பொருட்களை இணைத்து இயங்கக்கூடிய ஒரு சாதனம் என நாம் அறிவோம். ஆனால் ஒரு கணினியில் அவ்வளவு அதிகமான இணைப்பு வாயில்கள்(Ports) காணப்படுவதில்லை. தன்மையிலும், தொழிற்பாட்டிலும் வேறுபட்ட கணினியின் வெளி இணைப்பு மென்பொருட்களை விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் ஒரு கணினியில் காணப்படும்
IP Address என்றால் என்ன?
கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த இலக்கத்தை வைத்தே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றன இதனையே ( IP Address ) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP என்பது Internet protocol எனபதைக் குறிக்கிறது.
அந்த இலக்கம் ஒரு வலையமைப்பில் அந்த குறிப்பிட்ட ஒரு கணினியை மட்டுமே குறித்து நிற்கும். இன்னொரு கணினிக்கு அதே இலக்கம் வழங்கப் படமாட்டது.. இதனை ஆங்கிலத்தில்; uniqueness எனப்படுகிறது.
இணையத்தில் இணையும் ஒவ்வொரு முறையும் எமது கணினிக்கு இந்த ஐபி முகவரியை இணைய சேவை வழங்கும் நிறுவனம் வழங்குகிறது.. இது ஒரு தற்காலிகமான ஐபி முகவரியே. அடுத்த முறை இணையத்தில் இணையும் போது வேறொரு ஐபி முகவரியே நமக்குக் கிடைக்கும்,
இதனை டைனமிக் ஐபி முகவரி (Dynamic) எனப்படும். அதேவேளை இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ள சேர்வர் கணினிகள் ஒரு நிலையான (Static) ஐபி முகவரியைக் கொண்டிருக்கும்.
ஒரு ஐபி முகவரி 216.27.61.137 எனும் வடிவத்தில் இருக்கும். இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். ஒரு புள்ளி கொண்டு இந்த நான்கு பகுதிகளும் பிரிக்கப்படிருக்கும். ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான ஒரு இலக்கமாக இருக்கும்.
ஐபி முகவரிகள் நமது வசதிக்காக தசம் எண்களினாலேயே குறிக்கப்படுவது வழக்கம். எனினும் கணினி இந்த இலக்கங்களை பைனரி வடிவத்திலேயே புரிந்து கொள்கிறது, மேலுள்ள ஐபி முகவரி 11011000.00011011.00111101.10001001 எனும் பைனரி வடிவைப் பெறும். ஐபி முகவரியிலுள்ளா இந்த நான்கு பிரிவுகளையும் ஒரு ஒக்டட் (Octets) எனப்படும்.
பைனரி எண் வடிவில் ஒவ்வொரு இலக்கமும் 8 இடங்களைக் கொண்டிருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு எட்டு இலக்கங்களினதும் கூட்டுத் தொகையாக 32 எனும் இலக்கம் கிடைக்கிறது. இதனாலேயே ஐபி முகவரிகள் 32 பிட் எண் எனக் கருதப்படுகின்றன.
இந்த ஒவ்வொரு எட்டு இலக்கமும் 0 அல்லது 1 எனும் இரு வேறு நிலைகளைக் கொண்டிருக்க முடியுமாதலால் எட்டு இலக்கங்கள் கொண்ட ஒவ்வொரு ஒக்டட் கொண்டும் 28 = 256 வெவ்வேறான சேர்மானங்களை உருவாக்கலாம். எனவே ஒவ்வொரு ஒக்டட்டும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருக்க முடியும்.
இவ்வாறு நான்கு ஒக்டட் சேரும்போது 232 அல்லது 4,294,967,296 வெவ்வேறான் சேர்மானங்களை அல்லது இலக்கங்களைக் உருவாக்கலாம். அதாவாது இந்த முறையினை உபயோகித்து உலகிலுள்ள 4.3 பில்லியன் கணினிகளுக்கு வெவ்வேறான ஐபி முகவரிகளை வழங்கி விடலாம்..
by rajinthan.A